Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அரியலூரில் இன்று ஒரே நாளில் 168 பேருக்கு கொரோனா தொற்று

மே 06, 2020 12:09

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் மேலும் 168 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலோனோர் கோயம்பேடு சந்தையில் இருந்து வந்தவர்கள் என்று திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் நடந்த பரிசோதனையில் இந்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. தற்போது சென்னை கோயம்பேடு சந்தை மூலமாக பலருக்கும் கொரோனா தொற்று பரவி வருகிறது. இதுவரை 600க்கும் அதிகமானோருக்கு கொரோனா பரவி உள்ளது.

இந்நிலையில், கோயம்பேடு சந்தையில் பணியாற்றிவிட்டு சொந்த ஊர் சென்ற அரியலூரைச் சேர்ந்த ஏராளமான கூலி தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டத்தில் மேலும் 168 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலோனோர் கோயம்பேடு சந்தையில் இருந்து வந்தவர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் நடந்த பரிசோதனையில் இந்த தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

காஞ்சிபுரத்தில் 36 பேர் பாதிப்பு:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நுாற்றுக்கணக்கானோருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், ஏற்கனவே 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று 29 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கோயம்பேடு சந்தை மூலம் 36 பேர் இதுவரை காஞ்சிபுரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக காஞ்சிபுரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. இதில் ஏற்கனவே 10 பேர் குணம் அடைந்த நிலையில் தற்போது 51 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தலைப்புச்செய்திகள்