Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முதல்வர் பழனிசாமி வீட்டு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசுக்கு கொரோனா தொற்றால் அதிர்ச்சி

மே 07, 2020 06:57

சென்னை: முதல்வர் இபிஎஸ் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ் ஒருவருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் முதல்வர் இபிஎஸ் இல்லம் அமைந்துள்ளது. முதல்வர் வீட்டு பாதுகாப்பு பிரிவில் சுழற்சி முறையில் ஆண் மற்றும் பெண் போலீசார் பணியில் ஈடுபடுவது வழக்கம். இவ்வாறு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த பாதுகாப்பு பிரிவு பெண் போலீஸ் ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று உறுதியாகி உள்ளது. இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு விடுமுறையில் சென்று உள்ளார். தற்போது அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையின் போது இந்த நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர், முதல்வர் பாதுகாப்பு பணியில் உள்ள பிற போலீஸ்காரர்களுடன் சேர்ந்து பணியாற்றியுள்ளார்.

எனவே இந்த போலீஸ் பெண்மணி அல்லது இவருடன் பணியாற்றிய போலீசார் முதல்வருடன் அருகாமையில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் சென்றிருந்தால் அது விபரீதங்களை ஏற்படுத்தும் என்ற அச்சத்தின் காரணமாக, அதுகுறித்த கோணத்திலும் அதிகாரிகள் விவரம் கேட்டு வருவதாக கூறப்படுகிறது. முன்னதாக மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இல்லத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சிலருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு தொற்று ஏற்பட்டிருந்தது. இருப்பினும் உத்தவ் தாக்ரே 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

தலைப்புச்செய்திகள்