Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருப்பூரில் மது வாங்க குடையுடன் வந்த மதுப்பிரியர்கள்: குடை விலை திடீர் உயர்வு

மே 07, 2020 09:28

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் 238 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில், கரோனா கட்டுப்பாட்டு மண்டலத்தில் உள்ள 5 கடைகளைத் தவிர மீதம் உள்ள 233 கடைள் 43 நாள்களுக்குப் பிறகு இன்று  காலை 10 மணிக்குத் திறக்கப்பட்டது.

இதனிடையே, கொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளும் அரசு சார்பில் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் 
விஜயகார்த்திகேயன் குடியைப் பிடித்தபடி வந்தால்தான் மது விற்பனை செய்யப்படும் என்று அறிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து, திருப்பூர் மாநகரில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் குடைகளைப் பிடித்தபடியும், முகக் கவசம் அணிந்தபடியும் நீண்ட வரிசையில்  காலை 8 மணி முதலே காத்திருந்தனர். இதனிடையே, டாஸ்மாக் கடைகளுக்கு கிருமி நாசனி மூலமாக மருந்து தெளிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும், டாஸ்மாக் கடைகளின் அருகே திடீரென குடை விற்பனை, முகக்கவசம் விற்பனை செய்யும் கடைகளும் அதிகரித்துள்ளன. இதில், ரூ.100 விற்பனை செய்யப்படும் குடைகள் ரூ.180 வரையிலும், ரூ.5க்கு விற்பனை செய்யப்படும் முகக் கவசங்கள் ரூ.10க்கும் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்