Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோவை நல்லறம் அறக்கட்டளை சார்பில் நாள்தோறும் 1.50 லட்சம் பேருக்கு இலவச உணவு

மே 07, 2020 09:45

கோவை : கோவை மாவட்டத்தில் பசியால் தவிப்போர் யாரும் இல்லை என்ற நிலைலைய உருவாக்க ஏழை மக்களுக்கு கரம் கொடுக்கும் நல்லறம் அமைப்பு மார்ச் 24ம் தேதி களத்தில் இறங்கியது. குனியமுத்தூரில் 300 பேருக்கு உணவு தயாரிக்க அடுப்பில் நெருப்பேற்றி துவங்கியது. தற்போது நாள்தோறும் 1.50 லட்சம் பேருக்கு தரமான, சுவையான உணவை தயாரித்து உடனுக்குடன் விநியோகித்து வருகிறது.

நல்லறம் அறக்கட்டளையின் அவசரகால உணவு விநியோக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் கூறியதாவது:

நல்லறம் அறக்கட்டளை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கோவையில் உள்ள நீர்நிலைகளை மேம்படுத்தும் பணியை துவங்கியது. தொடர்ந்து ஆன்மீக பணி, ஏழை மாணவ, மாணவிகளுக்கு ஐ.ஏ.எஸ். படிக்கும் கனவை நிறைவேற்ற ஆர்.எஸ்.புரம் பகுதியில் அம்மா ஐ.ஏ.எஸ். அகாடமி தொடங்கியது. இதில் குரூப் 1, குரூப் 2 தேர்வு எழுத தகுதிமிக்க பேராசிரியர்களை கொண்டு இலவசமாக உயர்கல்வி கற்றுத்தரப்படுகிறது. நல்லறம் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சீரிய தலைமையில் நடைபெறும் சமுதாய பணியில் மேலும் ஒரு மைல்கல்லாக  இயற்கை பேரிடர் காலமான ஊரடங்கில் கோவை மாவட்டத்தில் பசியால் வாடும் எவரும் இல்லை என்ற நிலையை உருவாக்க கடந்த மார்ச் 24ம் தேதி அவசரகால இலவச உணவு விநியோகுழு தொடங்கப்பட்டது.

இதற்காக குனியமுத்தூர் பகுதியில் சிறிய அளவில் சமையலறை கூடம் 3 பேருடன் 300 பேருக்கு உணவு தாயரிக்க ஏற்றிய நெருப்பு  இன்று எட்டு இடங்களில் மெகா சமையலறை கூடங்கள் மூலம் நாளொன்றுக்கு ஒன்றரை லட்சம் பேருக்கு மூன்று வேளை உணவுகளை வழங்கி வருகிறோம். இதற்காக புளியகுளம், பேரூர், குனியமுத்தூர், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட எட்டு இடங்களில் திருமண மண்டபங்களை அமர்த்தி உணவுகளை தயாரிக்கும் பணியில் 300 சமையல் கலைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மல்லி சாதம், தக்காளி சாதம், புளி சாதம், லெமன் சாதம், தயிர் சாதம், வெஜ் பிரியாணி மற்றும் பிரட் வகைகள், இரவு மற்றும் காலை நேரங்களுக்கு சப்பாத்தி மற்றும் உப்புமா ஆகியவை ஈச்சனாரி, போத்தனூர், மைல்கல், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், மதுக்கரை, இருகூர், நீலாம்பூர், காளப்பட்டி, துடியலூர், வடவள்ளி, தடாகம் சாலை என நகர் பகுதியிலிருந்து கிராம பகுதிவரை உணவு வழங்கும் பணி நடைபெறுகிறது.

இந்த பணியில் மாவட்டத்திலுள்ள 300 அரிமா மற்றும் ரோட்டரி அமைப்பைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டர்கள் உணவு வழங்கும் பணியில் அர்ப்பணிப்போடு ஈடுபட்டு வருகின்றனர். தயாரிக்கும் உணவுகள் உடனுக்குடன் சூடாக சுவையாக உணவு பாத்திரங்களில் எடுத்துச் சென்று வழங்க ஆட்டோ, கார், டெம்போ, மினிடோர் வாகனம் என 350 வாகனங்கள் நகர்ப்புறம், கிராமப்புறம் என பாகுபாடின்றி அனைத்து பகுதிகளுக்கும் சென்று முறையாக விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.  

தலைப்புச்செய்திகள்