Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மராட்டியத்தில் வேலையில்லா பட்டதாரிகள் போட்டி

மார்ச் 13, 2019 07:31

மும்பை: நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், அரசியல் கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க முழுஉத்வேகத்துடன் தயாராகி வருகின்றன. வெற்றிக்கனியை பறிக்க கூட்டணி வளையங்களை உருவாக்கி பிரசார யூகங்களை வகுத்து வருகின்றனர். எனவே நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.  

மராட்டிய நாடாளுமன்ற தேர்தல் களத்தில் புதிய அறிமுகமாக வேலையில்லா பட்டதாரிகள் குதித்து இருக்கிறார்கள். 

‘அப்கி பார், கிராஜூவேட் சர்க்கார்' (இந்த முறை பட்டதாரிகள் அரசாங்கம்) என்ற முழக்கத்துடன் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் அவர்கள் 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்து உள்ளனர். 

இதன்படி புனே, நாந்தெட், வாஷிம், சோலாப்பூர், அகமதுநகர், ஹட்கனங்கலே, உஸ்மனாபாத், மாதா, அவுரங்காபாத் மற்றும் கோலாப்பூர் ஆகிய தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்து இருக்கிறார்கள். 

இதுபற்றி புனேயில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.என்.ஜாதவ் பாட்டீல் கூறுகையில், ‘‘நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மையே எங்களை தேர்தலில் போட்டியிடுவதற்கு நிர்பந்தப்படுத்தி இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக வேலை வாய்ப்புகளை பெருக்க அரசு எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை. 

நாட்டில் வேலைவாய்ப்பு திண்டாட்டத்தை ஒழிப்பது தான் எங்களது முக்கிய குறிக்கோள். அந்த நோக்கத்துக்காக தான் நாங்கள் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறோம். மற்ற தொகுதிகளிலும் விரைவில் வேட்பாளர்களை அறிவிப்போம்’’ என்றார்.

தலைப்புச்செய்திகள்