Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆந்திராவிற்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும்: பிரதமர் உறுதி

மே 07, 2020 10:44

புதுடெல்லி: ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் நடந்த காஸ் கசிவு காரணமாக தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாக, ஆந்திர முதல்வர் ஜெகனிடம் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் காஸ் கசிவு ஏற்பட்டது. 8 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வரும், மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன்.விசாகப்பட்டினத்தில் உள்ள அனைவரின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக வேண்டி கொள்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து, காஸ் கசிவு தொடர்பாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிரதமர், ஆந்திர முதல்வர் ஜெகனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவி மற்றும் ஆதரவை தர மத்திய அரசு தயாராக உள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்