Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஹாலிவுட் நடிகையிடம் நடிப்பு பயிற்சி பெறும் சமந்தா!

மே 07, 2020 02:28

சென்னை: பிரபல ஹாலிவுட் நடிகையிடம் நடிகை சமந்தா நடிப்புப் பயிற்சி பெற்று வருகிறார். தமிழில், விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்த சமந்தா, இந்தப் படத்தின் தெலுங்கு பதிப்பில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

பிறகு, பாணா காத்தாடி, நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம், அஞ்சான், கத்தி, தங்கமகன், தெறி உட்பட பல படங்களில் நடித்தார். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள அவர், நடிகர் நாகசைதன்யாவுடன் நடித்தபோது காதலில் விழுந்தார். நாகசைதன்யா பிரபல தெலுங்கு ஹீரோ நாகார்ஜூனாவின் மகன். சில வருடங்களாகக் காதலித்து வந்த அவர்கள், கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார் சமந்தா.

தமிழ், தெலுங்கில் பிசியாக இருக்கும் சமந்தா, கடைசியாக ‘96’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்திருந்தார். அடுத்து, காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்க இருக்கிறார். இதில், இன்னொரு ஹீரோயினாக நயன்தாரா நடிக்கிறார். விக்னேஷ் சிவன் இயக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஹீரோ. இந்நிலையில் இந்தப் படத்தில் இருந்து விலகி விட்டதாகவும் செய்தி வெளியானது. இதுபற்றி படக்குழு அதிகாரபூர்வத் தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை. இதையடுத்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட த்ரில்லர் படத்தில் நடிக்க இருக்கிறார். இதை அஸ்வின் சரவணன் 
தமிழ், தெலுங்கில் இயக்குகிறார். இவர், ஏற்கனவே நயன்தாரா, ஆரி, லட்சுமி பிரியா நடித்த 'மாயா', டாப்ஸி நடித்திருந்த கேம் ஓவர் ஆகிய த்ரில்லர் படங்களை இயக்கியவர்.

இந்நிலையில், கொரோனா காரணமாக விடப்பட்டிருக்கிற ஊரடங்கு உத்தரவை பயனுள்ள வகையில் கழிக்க முடிவு செய்துள்ள சமந்தா, பிரபல ஹாலிவுட் நடிகை ஹெலன் மிர்ரனிடம் நடிப்பு பயிற்சிப் பெறுகிறார். ஹெலன் மிர்ரன், த குயின் படத்தில், இரண்டாம் எலிசபெத் வேடத்தில் சிறப்பாக நடித்ததற்காக ஆஸ்கர் விருது பெற்றவர். மாஸ்டர்கிளாஸ் என்ற அமெரிக்க வெப்சைட் மூலம் இந்த பயிற்சியை அவர் மேற்கொள்கிறார் சமந்தா.

அதன் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள சமந்தா, ‘நான் சிறந்த நடிகையாகப் போகிறேன். நீங்கள் பொறுத்திருந்து பாருங்கள். இல்லை என்றால் இந்த பதிவை நீக்கிவிடுவேன்’ என்று தெரிவித்துள்ளார். இதற்கு ரசிகர்கள் சிலர், 'நீங்க ஏற்கனவே நல்ல நடிகை தான். பிறகு ஏன் படிக்கணும்?' என்று கேட்டுள்ளனர்.

தலைப்புச்செய்திகள்