Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அபுதாபி, துபாயில் இருந்து 363 பேர் கேரளா வந்தடைந்தனர்: 5 பேருக்கு கொரோனா அறிகுறி

மே 08, 2020 07:24

கொச்சி: துபாய் மற்றும் அபுதாபியில் இருந்து கேரளா திரும்பியவர்களில் 5 பேருக்கு கொரோனா அறிகுறி இருந்ததையடுத்து அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வெளிநாடுகளுக்கு சென்றிருந்த பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் சிக்கி தவித்து வருகின்றனர். அவர்களை மீட்டு அழைத்து வரும் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கி உள்ளது. இதற்காக 64 சிறப்பு விமானங்கள் தயார்படுத்தப்பட்டன.

அதன்படி ஏர்இந்தியா விமானம், நேற்று ஐக்கிய அரபு அமீரகம் சென்று, அங்குள்ள அபுதாபி விமான நிலையத்திலிருந்து 49 கர்ப்பிணிகள் உள்பட 181 பயணிகளை சுமந்துகொண்டு நேற்று இரவு கேரள மாநிலம் கொச்சி விமான நிலையம் வந்து சேர்ந்தது. இதேபோல் துபாயில் இருந்து 182 பயணிகளுடன் புறப்பட்ட மற்றொரு விமானம் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.

விமான நிலையங்களில் அனைவரும் இறங்கியதும் அவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் கொச்சி வந்தவர்களில் 5 பேருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால் அவர்கள், அலுவா மாவட்ட மருத்துவமனையில் உள்ள தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டனர். 

ஒருவருக்கு உடல்ரீதியான வேறு பாதிப்பு இருந்தது. அவர், எர்ணாகுளம் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த தனிமை முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். சில நாட்கள் அங்கு அவரது உடல்நிலை கண்காணிக்கப்படும்

49 கர்ப்பிணிகள், 4 குழந்தைகள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படுகின்றனர். 

தலைப்புச்செய்திகள்