Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜூன் - ஜூலையில் இந்தியாவில் கொரோனா உச்சத்தை அடையும்: எய்ம்ஸ் எச்சரிக்கை

மே 08, 2020 07:33

புதுடெல்லி: இந்தியாவில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கொரோனா வைரஸ் உச்சத்தை அடையும் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 52 ஆயிரத்து 952 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 35 ஆயிரத்து 902 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 15 ஆயிரத்து 267 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், இந்த கொடிய வைரசுக்கு நாடு முழுவதும் இதுவரை ஆயிரத்து 886 பேர் உயிரிழந்துள்ளனர். 

வைரஸ் பரவும் வேகத்தை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் உச்சத்தை அடையும் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ''மாதிரி தகவல்களின் அடிப்படை மற்றும் வைரஸ் பரவும் வேகம் அதிகரிப்பை கணக்கிடும்போது இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் ஜூன் மற்றும் ஜூலையில் உச்சத்தை அடையும். இதில் சில காரணிகள் உள்ளது. 

இந்த தாக்கம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் அதன் நேரத்தை பொறுத்தே அமையும்’’ என்றார்.

தலைப்புச்செய்திகள்