Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கரூரில் பா.ஜ., சார்பில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கல்

மே 08, 2020 10:23

கரூர்: உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் வாழ்வாதாரம் இழந்து வாடும் ஏழை, எளிய அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு பிரதமர், நரேந்திர மோடி ஆணையின்படி, 
தொழிற்சங்க மாநில செயலாளர் மதுக்குமார் கரூரில் அமைப்பு சாரா தொழிலாளர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று வழங்கப்படும் நிவாரணப் பொருட்கள் அடங்கிய வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கரூர் மாவட்ட தொழிற்சங்க தலைவர் அசோக்குமார் முன்னிலையில், அமைப்புசாரா தொழிற்சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளர் காவேரி மோகன்ராஜ் ஏற்பாட்டில், கரூரில் 200க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா நிவாரணமாக 11 பொருட்கள் அடங்கிய மோடி கிட் ராயனூர், செல்லாண்டிபாளையம், காந்திகிராமம் ஆகிய பகுதிகளில் வழங்கப்பட்டது. 

இதில் தொழிற்சங்கத்தின் கரூர் மாவட்ட செயலாளர் ரமேஷ், பனைமரத் தொழிலாளர் பிரிவு கரூர் மாவட்ட  அமைப்பாளர் செந்தில்குமார், சலவைத் தொழிலாளர் பிரிவு கரூர் மாவட்ட அமைப்பாளர் பூமிநாதன்,  தாந்தோணி ஒன்றிய தொழிற்சங்க செயலாளர் ரமேஷ், நலவாரிய அமைப்பாளர் முருகன்,  கிருஷ்ணராயபுரம் ஒன்றிய தொழிற்சங்க செயலாளர் பிரபாகரன்,  கரூர் நகர துணைத் தலைவர் சிவகுமார், செல்லாண்டிபாளையம் கௌதம், தெற்கு காந்திகிராமம் தொழிற்சங்க நிர்வாகிகள் ரவிச்சந்திரன், காளிமுத்து, குமார்,  பிரகாஷ்,  தன்னார்வலர்கள் தேவராஜ், சபரீஸ்வரன், சேதுபதி ஆகியோர் கலந்துகொண்டு தொழிலாளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று நிவாரண பொருட்களை வழங்கினர்.

தலைப்புச்செய்திகள்