Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சிங்கப்பூரில் தவித்த 234 இந்தியர்கள் டெல்லி வந்தடைந்தனர்

மே 08, 2020 11:41

புதுடெல்லி: சிங்கப்பூரில் தவித்த 234 இந்தியர்கள், சிறப்பு விமானம் மூலம் டில்லி அழைத்து வரப்பட்டனர்.

ஊரடங்கு உத்தரவால், சிங்கப்பூரில் இருந்து வெளியேற முடியாமல் 3,500 இந்தியர்கள் தவித்தனர். அவர்கள், இன்று(மே 8) முதல் அழைத்து வரப்பட உள்ளனர். முதற்கட்டமாக, 234 பேர், ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் மூலம், வர உள்ளனர். இன்று நண்பகல் 12:00 மணியளவில் சிங்கப்பூரில் இருந்து, முதல் விமானம் டில்லி வந்து சேர்ந்தது. பயணியர் அனைவருக்கும், கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு, விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

வரும், 13ம் தேதி வரை, ஏர் இந்தியா நிறுவனம், 64 விமானங்கள் மூலம், சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சிக்கியுள்ள, 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களை அழைத்து வர உள்ளது.இந்தியா வருவோர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும். இன்று மட்டும் 5 நாடுகளில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர 6 விமானங்கள் இயக்கப்பட உள்ளன.

சவுதி அரேபியா, பஹ்ரைன், தாகா, ஐக்கிய அரபு எமீரேட்சிற்கும் ஏர் இந்தியாவின் சிறப்பு விமானங்கள் மூலம், அங்கு தவித்து வரும் இந்தியர்கள் அழைத்து வரப்பட உள்ளனர். மாலத்தீவில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வர அனுப்பி வைக்கப்பட்ட கடற்படைக்கு சொந்தமான கப்பல் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுடன் அங்கிருந்து கிளம்பி இந்தியா நோக்கி வந்து கொண்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்