Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 30% ஆக அதிகரிப்பு

மே 09, 2020 09:44

புதுடெல்லி : இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைவோர் விகிதம் 30 சதவீதமாக அதிகரித்ததோடு, 216 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு இல்லையென மத்திய சுகாகாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56,342 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,886 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை இணை செயலர் லாவ் அகர்வால் கூறியதாவது,கடந்த 24 மணிநேரத்தில் 3,390 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 1,273பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைவோர் விகிதம் 29.36 % ஆக அதிகரித்து உள்ளது. தற்போது வரை 16,540 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். 37, 916 நோயாளிகள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

3.2 சதவீதம் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் உதவியுடனும், 4.7 சதவீதம் பேருக்கு ஐ.சி.யூ பிரிவிலும், 1.1 சதவீதம் பேருக்கு வெண்டிலேட்டர் உதவியுடனும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட வாரியாக கொரோனா வைரஸ் பாதிப்பு நிலவரங்களை பொறுத்தவரை ' நாடு முழுவதும் 216 மாவட்டங்களில் எந்த கொரோனா தொற்று பாதிப்பும் பதிவாகவில்லை. 42 மாவட்டங்களில் கடந்த 28 நாட்களிலும், 29 மாவட்டங்களில் கடந்த 21 நாட்களாகவும், 36 மாவட்டங்களில் கடந்த 14 நாட்களிலும் புதிய கொரோனா தொற்று பாதிப்பு இல்லை. 46 மாவட்டங்களில் கடந்த 7 நாட்களாக கொரோனா பாதிப்பு பதிவாகவில்லை' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்