Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

துபாயிலிருந்து 182 இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்திறங்கினர்

மே 09, 2020 09:49

சென்னை: உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு காரணமாக விமான சேவைகள் முடங்கின. பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் சிக்கி தவித்து வருகின்றனர். சொந்த நாடு திரும்ப முடியாத இந்தியர்களை மீட்டு வரும் 'வந்தே பாரத்' நடவடிக்கையினை மத்திய அரசு துவக்கியுள்ளது.

அதன்படி நேற்று ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் 2 சிறப்பு விமானங்கள், 363 இந்தியர்களுடன் புறப்பட்டு நேற்று இரவு கேரளாவின் கொச்சி மற்றும் கோழிக்கோடு சர்வதேச விமான நிலையம் வந்திறங்கியது. அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று பக்ரைனின் மனாமாவிலிருந்து 25 குழந்தைகள் உள்பட 182 இந்தியர்கள் கேரளாவின் கொச்சி வந்திறங்கினர்.

மற்றொரு விமானம் துபாயிலிருந்து 3 குழந்தைகள் உள்பட 182 இந்தியர்கள் நேற்று இரவு சென்னை விமான நிலையம் வந்திறங்கினர். இவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளது. தனிமைப்படுத்துதலுக்கும் உட்படுத்தப்பட உள்ளனர்.

தலைப்புச்செய்திகள்