Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்துக்கடவுள்களை தொடர்ந்து அவமதிக்கிறார்: விஜய் சேதுபதி மீது போலீஸில் புகார்

மே 09, 2020 02:34

சென்னை: இந்துக் கடவுள்களை அவமதிப்பதாக நடிகர் விஜய் சேதுபதி மீது இந்து மக்கள் முன்னணி சார்பில் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி கடந்த சில நாட்களாக ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி தலைப்புச் செய்தியாகி வருகிறார். அந்த வகையில் இந்துக் கடவுள்கள் குறித்து பேசி மீண்டும் பிரச்சனையை இழுத்து விட்டுள்ளார். அண்மையில் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கிய விஜய் சேதுபதி, “கோவில்களில் சாமியை குளிப்பதை காட்டுவார்கள். ஆனால், உடை மாற்றுவதை காட்ட மாட்டார்கள்,” என்றார்.

கோவில்களில் அபிஷேகம் செய்வதை காட்டுவதையும் உடை மாற்றும் போது திரையிட்டு மறைப்பதையும் விமர்சிக்கும் வகையில், சிறுமி ஒருவர் தனது தாத்தாவிடம் கேட்டதாக ஒரு கதையை கூறினார் விஜய் சேதுபதி.

இந்நிலையில் இந்த விவகாரம் பூதாகரமாயிருக்கிறது. விஜய் சேதுபதி ஏற்கனவே ஒரு முறை மனிதனை காப்பாற்ற மனிதன் தான் வரவேண்டும் மேலிருந்து சாமி என்று ஒன்று வராது என கூறியிருந்தார்.

தற்போது மீண்டும் இந்துக் கடவுள்களுக்கு அபிஷேகம் செய்யப்படுவதையும் விமர்சித்து சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். ஏற்கனவே இந்த விவகாரம் குறித்து விஜய் சேதுபதி மீது திருச்சி பேலீஸ் கமிஷனரிடம் இந்து மகா சபா புகார் அளித்தது. கடவுள்களுக்கு செய்யப்படும் அபிஷேகத்தையும், ஆகம விதிகளையும் விஜய் சேதுபதி அவமதித்ததாக கூறி புகார் அளித்தனர்.

இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி இந்துக் கடவுள்களை அவமதிப்பதாக கூறி சென்னை போலீஸ் கமிஷனருக்கு ஆன்-லைனில் இந்து மக்கள் முன்னணி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்