Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பா.ஜ., அரசின் ஓராண்டு சாதனை விழாக்கள் ரத்து : வருத்தத்தில் மோடி

மே 10, 2020 05:20

புதுடெல்லி: இந்தியாவை, பல ஆண்டு காலம் ஆட்சி செய்த காங்கிரசை, பா.ஜ., ஏற்கனவே பரிதாப நிலைக்கு தள்ளியுள்ளது. கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலிலும், பா.ஜ., 300க்கும் மேலான தொகுதிகளில் வெற்றி பெற்றது. நரேந்திர மோடி, இரண்டாம் முறையாக பிரதமராக பதவியேற்று, ஒரு வருடம் முடியப் போகிறது.

இதையடுத்து, மோடி, வெளிநாட்டு அதிபர்கள், இந்திய பிரபலங்கள் என, பலரையும் அழைத்து முதல் ஆண்டு நிறைவை, ஒரு மாபெரும் விழாவாக நடத்த திட்டமிட்டிருந்தார். இது, கட்சிக்கும், தொண்டர்களுக்கும், உற்சாகத்தையும், உத்வேகத்தையும் ஏற்படுத்தும் என்பதால், அவர் இப்படி திட்டமிட்டிருந்தார். ஆனால், மோடியின் திட்டத்தை, கொரோனா பரவல் ஒழித்துக் கட்டிவிட்டது. இதனால் மோடி நொந்து போயுள்ளார்.

'முதல் வருட நிறைவு விழாவை யாரும் கொண்டாட வேண்டாம்; கொரோனா பரவலை தடுக்க உதவுங்கள்; உணவில்லாதவர்களுக்கு உணவளியுங்கள்.'புலம் பெயர்ந்து கஷ்டப்படும் தொழிலாளர்களுக்கு உதவுங்கள்; இது தான், நம் முதல் வருட நிறைவு கொண்டாட்டம்' என, விரைவில், கட்சி தலைமையிடமிருந்து, தொண்டர்களுக்கு செய்தி வர உள்ளது.

இந்த செய்தி, எதிர்க்கட்சியினருக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. 'இப்படிப்பட்ட விஷயங்களில் மோடி கில்லாடி; எதையும் ஒரு விழாவாக்கி, அதை, மீடியாக்களில் பரப்பி விடுவார். 'கொரோனாவால் இது தடுக்கப்பட்டுவிட்டது' என்கின்றனர் எதிர்க்கட்சியினர்.

தலைப்புச்செய்திகள்