Tuesday, 25th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னையில் 31 கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தொற்று

மே 10, 2020 05:34

சென்னை: சென்னையை சேர்ந்த, 31 கர்ப்பிணிப் பெண்களுக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டது. இதில், 22 பேருக்கு, அறுவை சிகிச்சை வாயிலாக குழந்தைகள் பிறந்து, அக்குழந்தைகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன.

சென்னையில், 31 கர்ப்பிணி பெண்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களில், எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, 12 பேரில், 10 பேருக்கும், தண்டையார்பேட்டை, ஆர்.எஸ்.ஆர்.எம்., மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற, 11 பேரில், ஏழு பேருக்கும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது.

அதே போல், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, ஆறு பேரில், ஐந்து பேருக்கும், அறுவை சிகிச்சை வாயிலாக, குழந்தைகள் பிறந்துள்ளன.அந்த, 22 குழந்தைகளும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன; அவற்றுக்கும் தொற்று பாதித்துள்ளதா என அறிய, பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது.

தொற்று அறியப்பட்ட இரு கர்ப்பிணி பெண்கள், திருவல்லிக்கேணி கஸ்துாரிபாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். சிகிச்சையில் உள்ள, 31 பெண்களும், தற்போது நலமுடன் இருப்பதாகவும், 14 நாட்கள் கண்காணிப்புக்கு பின், நோய் தொற்று முழுமையாக குணமடைந்தவுடன், வீட்டுக்கு அனுப்பப்படுவர் என்றும், மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

தலைப்புச்செய்திகள்