Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வாரணாசியில் சிக்கிய 40 தமிழர்கள்: திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. மீட்பு

மே 10, 2020 10:36

மதுரை: கொரோனா ஊரடங்கிற்கு முன்னரே காசிக்கு சென்று தற்போது வரை வீடு திரும்ப முடியாமல் தவித்து வந்த திருப்பரங்குன்றம் தொகுதியை சார்ந்த 40-க்கும் மேற்பட்ட பொதுமக்களை தமிழகம் அழைத்து வருவதற்கு தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் சரவணன் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு தற்போது அவர்களை தமிழகம் அழைத்து வந்துள்ளார்.

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட நிலையூர் கைத்தறிநகரைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட நபர்கள் மார்ச் மாதத்திற்கு முன்னர் ஆன்மீக பயணமாக காசி யாத்திரை சென்றுள்ளனர். கொரோனா ஊரடங்கினால் இந்தியா முழுவதும் விமான சேவை, ரயில் சேவை, போக்குவரத்து சேவை அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டதால் வீடு திரும்ப முடியாமல் அங்கே உள்ள மடத்தில் தங்கியிருந்தனர். அவர்களுக்கு சரவணன் எம்.எல்.ஏ. நிதியுதவி அளித்தும், அவர்களை தமிழகம் அழைத்து வருவதற்கும் மாவட்ட ஆட்சியர் மூலம் நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தார்.

தற்போது அரசு உத்தரவின் பேரில் சரவணன் உரிய பயண அனுமதி பெற்று அவர்களில் முதல் 14 நபர்கள் சொந்த ஊருக்கு வந்தடைய உதவியுள்ளார். மீதமுள்ள நபர்கள் அடுத்தடுத்த வாகனம் மூலம் வந்துகொண்டிருக்கின்றனர்.
சொந்த ஊர் திரும்பிய அவர்களை எம்.எல்.ஏ. சரவணன் நேரில் சென்று நலம் விசாரித்து அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட உணவுப்பொருட்களையும், உதவித்தொகையும் வழங்கியுள்ளார். பொதுமக்கள் அனைவரும் தி.மு.க. எம்.எல்.ஏ. சரவணனுக்கு நன்றி தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்